மாவட்ட நிஸ்கோ கூட்டுறவுச்சங்கம் – புதிய முகாமையாளர் நியமனம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுமுகாமையாளராக செட்டிபாளையத்தைச்சேர்ந்த , மண்முனைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி வெள்ளக்குட்டி தருமரெத்தினம் நியமனம்.

நேற்று செவ்வாய்க்கிழமை ( 02.04) மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர் இவருக்கான நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்.

புதிய பொதுமுகாமையாளராக நியமனம் பெற்ற வெ.தருமரெத்தினம் 1993ம் வருடம் இளைஞர் சேவை அலுவலராக நியமனம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமைபுரிந்ததுடன், அம்பாறை மாவட்டத்திலும் கடமையாற்றியுள்ளார் .

அத்துடன் 1999ம் வருடம் தொடக்கம் புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல் நிலைய பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.