ஓ.எல் பரீட்சையில் இறுதிநிலையைப் பெற்ற கிழக்கு மாகாணம்.

கிழக்கு மாகாணம் அண்மையில் வெளியாகியுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் இறுதி நிலையைப் பெற்றுள்ளது.

சாதாரணதரத்தில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாகிய மாணவர்களின் பெறுபெற்று பகுப்பாய்வு அடிப்படையில், மாகாணதரப்படுத்தலில் இறுதி மாகாணமாக கிழக்கு மாகாணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணம் இறுதி மாகாணமாகவும், கிழக்கு மாகாணம் எட்டாவது மாகாணமாகவும் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.99சித்தி வீதங்களைப்பெற்று 8வது மாகாணமாகவும், 69.97வீதங்களைப்பெற்று கிழக்கு மாகாணம் 9வது இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.