முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கிய திருடன்

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை திருடன். அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மகன் விபத்தில் காயமடைந்துள்ளார் அதற்குப் பணம் தேவை எனக் கேட்டதால் பதற்றமடைந்த மூதாட்டி தான் அணிந்திருந்த சங்கிலியை திருடனிடம் கழற்றிக் கொடுத்துள்ளார்.

எனினும் மகனைக் கண்டதும் தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை மூதாட்டி அறிந்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.