1000 மொழி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மனோகணேசன் தெரிவிப்பு

முதற் கட்டத்தின் 1000 மொழி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழு நிலை விவாத்தில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார் .நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் எதிரக்கட்சியினர் பீதியடைந்துள்ளனர். நல்லிணக்க அமைச்சு தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. மொழி தொடர்பில் பாரிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்களை உருவாக்குதலில் கல்வி அமைச்சுக்கு வரையறுக்கப்பட்டதல்ல. முதற் கட்டத்தின் கீழ் 1000 மொழி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

பெயர் பலகைகள் மும்மொழியிலும் இருக்க வேண்டும். இது தொடர்பில் முறைப்பாடுகள் இருக்குமாயின் அவற்றை முறையிட முடியும் .வன் ஸ்ரீ லங்கா என்று எழுத்தை ஒன்றை அறிமுகப்படுதத் எதிர்பார்த்துள்ளதோடு சமகால அரசாங்கத்திற்காக தமிழ் சிங்கள கற்கை நெறிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் அறிவு பேதுமானதாக இல்லை இந்த அறிவை பெற்றுக் கொடுப்பது முக்கியமாகும் 6000 மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது தமிழ் மொழி கற்கை நெறிக்காக 1820 ஆசிரியர்கள் இணைந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.