பாடசாலைகளுக்கான விடுமுறை

2019 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரத்துடனான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதல் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. 2 ஆம் தவணை இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை பாடசாலை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.