மகிழவெட்டுவான் பாடசாலை மாணவியின் வரலாற்று சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழவெட்டுவான் பாடசாலை மாணவி கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 8ஏ, 1வீ சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்ற தில்லைநாதன் சரணா என்ற மாணவியே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த மாணவி வணிகக்கல்வி பாடத்தில் வீதர சித்தியினையும், ஏனைய பாடங்களில் ஏதர சித்தியையும் பெற்றுள்ளார். மேலும் இப்பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலப்பாடத்தில் ஏதர சித்தி கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.