100வீத சித்தியைப்பெற்ற கடுக்காமுனை வாணி

மண்முனை தென்மேற்கு கோட்டத்திலும் வரலாற்றுச் சாதனைகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலைகள் வெளியாகியுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் வரலாற்றுச்சாதனைகளை நிலைநாட்டியுள்ளன.

குறித்த கோட்டத்திற்குட்பட்ட, கடுக்காமுனை வாணி வித்தியாலயம் 100வீத சித்தியைப்பெற்றுள்ளது. அதேபோன்று இக்கோட்டத்தின் அதிகூடிய பெறுபேறாக 8ஏ,வீ சித்திகள் முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் பதிவாகியுள்ளது.

மேலும், மகிழடித்தீவு மகா வித்தியாலயம் 82வீத சித்தியினையும், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் 71வீத சித்தியினையும், முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம் 68.8வீத சித்தியையும், முதலைக்குடா மகா வித்தியாலயம் 62வீத சித்தியையும், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் 61.8வீத சித்தியையும், மாவடிமுன்மாரி, அம்பிளாந்துறைப்பாடசாலைகள் 50வீத சித்தியினையும், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் 45வீத சித்தியினையும், 40வட்டை பாடசாலை 21வீத சித்தியினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.