மட்வாழைச்சேனை இந்துக்கல்லூரியில்மாணவர்களின் பெறுபேறுகள்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் 02 பேர் 9Aசித்தியும் 01 மாணவன் 8A1Bயும் 04 மாணவர்கள் 7யும் 2Bசித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜெயரஞ்சித் அம்றிதா, சந்திரகுமார் மோஐpத் முறையே 9ஏ சித்தியும், கருணாகரன் லோசாந் 8A1Bசித்தியும், சற்குணதாசன் தருண், கமலநாதன் அஐhனியா, உதயகுமார் தருணிக்கா, உருத்திர மூர்த்தி ருசாந்தினி ஆகிய மாணவ, மாணவியர்கள் 7யA2Bசித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

118 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 78 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளமை கவனிக்கத் தக்கது. அத்துடன் 2017 ஆம் பரீட்சைக்கு தோற்றி உயர் தரத்திற்கு 63 விகிதமான மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். 2018அம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 இல் 66.1 விகித அதிகரிப்பு காணப்படுவது குறிப்பிடத் தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் கல்லூரி முதல்வர் அ.ஜெயஜீவன் குறிப்பிடுகையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் அடைவு மட்டத்தை அதிகரிப்பதில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் அதரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்