இனவாதமில்லாத அரசியல் தலைவன் பிரதமர் ரணில்!

இனவாதமில்லாத அரசியல் தலைவன் பிரதமர் ரணில்!
ஜக்கிய தேசிய முன்னணியை ஆதரியுங்கள்.
வடக்கு கிழக்கு இனி ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது!
சம்மாந்துறையில்கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா!
(காரைதீவு நிருபர் சகா)

 
யுத்தம் மௌனித்த பிறகும் கடந்த அரசு வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கினார்கள். எனினும் நல்லாட்சி அரசு பொறுப்பேற்றபிற்பாடு பாகுபாடு குறைந்துள்ளது. வடக்கு கிழக்கு இனி ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது.
 
இவ்வாறு சம்மாந்துறை வலயத்திற்கான  ஆசிரியர்வாண்மை விருத்தி நிலையத்தை திறந்துவைத்துப்பேசிய  கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இத்திறப்புவிழா சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நேற்று(23) மாலை நடைபெற்றது.
‘இனவாதம் அறவே இல்லாத தலைவன் எமது பிரதமர் ரணில்விக்ரசிங்க. அவரது கரத்தைப்பலப்படுத்தினால் நாடு மேலும் சுபீட்சமாகும். எனவே ஜக்கியதேசியமுன்னணியை ஆதரியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
 
ஏனைய அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.ஜ.எம். மன்சூர்
முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.
 
அங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;:
நான்குவருட நல்லாட்சியில் கல்வியமைச்சு பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை இனமதபேதமற்று முன்னெடுத்துவருகிறது.
கடந்த 30வருடகாலமாக வடக்கு கிழக்கு பட்ட பெருந்துயர் பற்றி அனைவரும் அறிவோம். இனி அதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இறுதியுத்தத்தில் 90ஆயிரம் பெண்கள் விதவைகளானார்கள். 30ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளானார்கள். அண்மையில் வெளியான வரவுசெலவுத்திட்டத்தில் 72ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவான 3000ருபாவை 5000ருபாவாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
எனவே 9மாகாணங்களையும் ஒரே தராசில் வைத்துப்பார்க்ககூடாது என்று கூறுவதற்கு இதுவேகாரணம். எனவே பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். கூடுதல் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவேண்டும்.
வேலைவாய்ப்புகள் விகிதாசாரப்டபடி வழங்கப்படவில்வை. வடக்குகிழக்கிலுள்ள வெற்றிடங்களை வேலைவாய்ப்புசளை அங்கள்ளவர்கைளக்கொண்டே நிரப்பப்படவேண்டும். தெற்கிலிருந்து இறக்குமதி செய்யவேண்hய அவசியமில்லைஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்து நல்லாட்சியi ஏற்படுத்திவர்கள் சிறுபான்மையினர். 
ஆனால் அந்த 52நாள் திடீர் ஆட்சிமாற்றத்தில் அவர்கள்செய்த அடாவடித்தனம் அராஜகம் பலரையும் பாதித்தது.
அதனையும் சாணக்கியமாகக்கையாண்டு வென்றவர் எமது பிரதமர் ரணில் அவர்கள். மறுபிறவியெடுத்து இந்த மாற்றத்தைக்கொண்டுவந்ததன்பலனாக இன்று ஜ.தேசியமுன்னணி ஆட்சியாளர்களாக மாறியது.
இன்றைய ஜக்கியதேசியமுன்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவுப்ஹக்கீம் அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிசாட்பதியுதீன் த.தே.கூட்டமைப்புத்தலைவர் இரா.சம்பந்தன் ஜயா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இந்தக்கூட்டமைப்பினால்தான் வடக்கு கிழக்கு மலையகத்தை முன்னேற்றமுடியும்.
கல்வி வளங்களை அதிகரிக்கமுடியும். 
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் 8ஆம் 9ஆம்இடங்களில் அதாவது இறுதிநிலையிலிருப்பதற்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த அநியாயமே.
 
கடந்த ஆட்சிகாலத்தில் கல்வி வளர்ச்சி காண்பதெப்படி? கல்விமான்களை கொன்றொழித்தார்கள். பாடசாலைகளை உடைத்தார்கள்.தகர்த்தார்கள். அழித்தார்கள். வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலைகளை தகர்த்து அங்கு இராணுவமுகாம்களை ஏற்படுத்தினார்கள். இந்தநிலையில் கல்வி எவ்வாறு வளர்ச்சியடைவது?
 
நாட்டின் ஏனைய மாகாணங்களோடு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒப்பிடமுடியாது. இது யுத்தத்தாலும் இயற்கை அழிவுகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டவை. எனவே வளப்பங்கீட்டின்போதும் நிதியொதுக்கீட்டின்போதும் வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு இரட்டிப்பு விசேடகவனம் செலுத்தப்படவேண்டும்.
கடந்தகால அரசின் அநியாயமான அராஜகங்கள் அட்டுழியங்கள் மூலம் தமிழ்பேசும் சமுகம் வெகுவாகப்பாதிக்கப்பட்டிருந்தன. பலவற்றை இழந்துவிட்டோம்.
எனவே தொடர்ந்து ஒன்றிணையுங்கள். கல்வியினுடாக புதிய சகாப்தம் படைப்போம். என்றார்.
இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச்சின்னமொன்று வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் அடங்கிய கல்வியலாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர் இஸ்மாயில் மற்றும் ஆசிரியர் நிரவாகத்திற்கான கல்விப்பணிப்பாளர் பிரசன்ன உபசாந்த ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்ச்சிகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்தளித்தார்.
நன்றியுரையை ஆசிரியர் நிலைய முகாமையாளர் கே.செல்வராஜா நிகழ்த்தினார்.