கிழக்கு மாகாணமட்ட குறுநாடகப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட மாகாணமட்ட குறுநாடக போட்டியிலேயே கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய தோப்பிழந்தோம் குறுநாடகம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
இதனை கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர் சதாசிவம் முகுந்தன் நெறியாழ்கை செய்துள்ளார்.
குறித்த நாடகத்தில் நடித்த மாணவன் ஒருவனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், நாடகத்தினை நெறியாழ்கை செய்த ஆசிரியருக்கு சிறந்த நெறியாழருக்கான விருதுகளும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.