க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளே அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.