அச்சம் கொள்ள வைக்கும் டெங்கு காய்ச்சல்.Dr. விஷ்ணு சிவபாதம்

எங்கள் அனைவருக்குமே டெங்கு காய்ச்சல் என்றால் இனம் தெரியாத ஒரு பயம் வருவது உண்மையே. அந்தவகையில் டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக சில விளக்கங்களை தரலாம் என நினைக்கிறேன்.

டெங்கு ஆனது ஒரு வைரஸால் ஏற்படும், நுளம்பினால்பரப்பப்படும் காய்ச்சலாகும். இது வயது பேதமின்றி அனைவரையும் தாக்கினாலும் சிறு குழந்தைகளும்,கர்ப்பிணித் தாய்மாரும் மிக அதிகமாக பாதிக்கப்படுவர்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல்
தலைவலி
வாந்தி
வயிற்று வலி
கைகால் உழைவு
மூட்டு வலி
கண்ணுக்கு பின்னால் ஏற்படும் வலி

ஆனால் சிலருக்கு காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமலும் டெங்கு காய்ச்சல் ஏற்படலாம் (சிலவேளைகளில்இருமலுடன்)

டெங்கு காய்ச்சல் ஆனது மருத்துவத் துறையை பொறுத்தவரையில் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். டெங்கு காய்ச்சல்(Dengue Fever), டெங்கு இரத்தப் பெருக்கு காய்ச்சல்(Dengue Haemorrhagic Fever). இங்கு இரண்டாவது வகையானது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்,சிலவேளைகளில் உயிராபத்தையும் ஏற்படுத்தலாம்.இருந்தாலும் இந்த இரண்டு வகையையும் முதல் இரண்டு நாட்களில் பிரித்து அறிவது மிகக் கடினம்.

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் உடன் இன்புளுவன்சா எனப்படும் வைரஸ் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகல் நிலைமை மேலும் சிக்கலாகிறது. எனவே குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தை பெற்ற பின்னரோ தங்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது வைத்தியரை உடனடியாக நாடு வேண்டும்.

காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் ஏற்படுமிடத்துஉடனடியாக வைத்தியரை நாட வேண்டும்

காய்ச்சல் முற்றாக விட்ட பின் உடல்நிலைமோசமடைந்தது காணப்படுதல்.
நீராகாரத்தை அருந்த முடியாதவிடத்து.
மிக அதிகமாக தாகம் ஏற்படும் பொழுது.
மிக அதிகமாக வயிற்று வலி உள்ள போது
கைகால்கள் குளிர்வடையும் வேளை
உடம்பிலிருந்து குருதிப்போக்கு ஏற்படும்  சந்தர்ப்பத்தில்
ஆறு மணித்தியாலத்திற்கு மேல் சிறுநீர் போகாமல் இருந்தால் 

குறிப்பாக வைத்தியர் ஒருவரினால் விடுதியில் அனுமதிக்கும்படி கேட்கப்படும் பொழுது அதை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்க கூடாது. ஏனென்றால் டெங்குக் காய்ச்சலுடன் மிக நேரம் தாழ்த்தி வரும் நோயாளர்களை குணப்படுத்துவது மிகவும் கடினமான விடயம். சில சமயங்களில் இது உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஏனென்றால் டெங்கு குருதிப் பெருக்கு காய்ச்சலின் போதுஉடலினுள்ளே தண்ணீர் வெளியேறுவதனால்(Leaking), அந்த குறிப்பிட்ட அதிதீவிர காலப்பகுதியில் (Critical Phase)நீங்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒருவராக உள்ளீர்கள். இக்காலப்பகுதியில் நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது உங்கள் உடல் நிலைமை மிக மோசமடையலாம்.

ஒருவருக்கு காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டியவை

இயலுமான வரை ஓய்வெடுக்க வேண்டும்.
காய்ச்சலுக்கு பனடோல் மட்டும் குடிக்க வேண்டும்.குறிப்பாக NSAIDs (அஸ்பிரின், Brufen) எனப்படும்மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது. சிலவேளைகளில் வைத்தியர்களால் இந்த வகையானமருந்துகள் வழங்கப்பட்டால் அதை சற்று விளக்கமாககேட்டறிந்து தவிர்த்து கொள்ளவும்.
தேவையான அளவு நீராகாரத்தை குடித்தல் வேண்டும்.
போதுமான அளவு சிறுநீர் போவதை உறுதி செய்யவேண்டும்.
கண்டிப்பாக காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாம் நாளில்வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப இரத்த பரிசோதனைசெய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பற்றிய சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்

காய்ச்சல் ஏற்படும் பொழுது பப்பாசி சாற்றையும், மாதுளம்பழத்தையும் உட்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்!!!

இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படாத சமூகம் சார்ந்த ஒருமூடநம்பிக்கையாகும்

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கு நமக்குள்ள பொறுப்புக்கள்

காய்ச்சல் ஏற்படும் பொழுது மேற்குறிப்பிட்டஅறிவுரைகளை பின்பற்றுதல்.
வீட்டையும், வீட்டு சூழலையும் டெங்கு நுளம்பு பரவாதவாறுசுத்தமாக வைத்திருத்தல்.
டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து இயலுமான வரைதவிர்த்துக் கொள்ளல். (டெங்கு நுளம்பானது காலையிலும்மற்றும் மாலையிலும் மிக அதிகமாக கடிக்கும்)
உங்கள் குழந்தைகளின் பாடசாலைச் சூழல் சுத்தமாகஉள்ளது என்று உறுதிப்படுத்துதல் (முடியும் என்றால்விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் சென்றுபாடசாலையை சுத்தப்படுத்துதல்)
உங்கள் அலுவலகம் மற்றும் வேலைத்தளங்களில் நுளம்புபெருகும் இடங்களை அழித்தல்.
டெங்கு காய்ச்சல் பற்றிய விளக்கத்தை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ளல்.
காய்ச்சல் ஏற்படும்போது உடனடியாக வைத்தியரின்ஆலோசனை பெறுதல். (குறிப்பாக சிறு குழந்தைகளும்கர்ப்பிணித் தாய்மாரும்)

எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாப்போமாக!!!

Dr. விஷ்ணு சிவபாதம்

MBBS, DCH, MD Paediatrics

குழந்தை நல வைத்திய நிபுணர்

மருத்துவ பட்டப் பின் படிப்பு நிறுவனம், கொழும்பு