வாழைச்சேனையில் நடைபெற்ற பௌணர்மி கலைவிழா.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச பௌர்ணமி கலை விழா புதன்கிழமை மாலை கண்ணகிபுரம் குழந்தை யேசு மைதானத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் உட்பட செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச கலைஞர்களின் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், கரகாட்டம், கூத்து, நடனம், கவியரங்கம், பாடல்கள் உட்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பிரதேச கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.