காரைதீவு பிரதேசஅபிவிருத்திக்கு பத்துக்கோடி ருபா!

காரைதீவு பிரதேசஅபிவிருத்திக்கு பத்துக்கோடி ருபா!
7வட்டாரங்களிலும்  மக்களிடம் ஆலோசனை அறியும்கூட்டங்கள்!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
 
 
உள்ளுராட்சி அமைச்சினுடாக உள்ளுராட்சி சபைகளை வலுப்படுத்தும்
திட்டத்தின்கீழ் உலகவங்கி நிதியுதவியை வழங்கிவருகிறது.

 
அதன்கீழ் காரைதீவு பிரதேச அபிவிருத்திக்கென உலகவங்கித்திட்டத்தின்கீழ்
100மில்லியன்ருபா(பத்துக்கோடி ருபா) காரைதீவு பிரதேசசபைக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது.
 
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில்
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த இருதினங்களில்  வட்டாரரீதியாக மக்களின்
ஆலோசனைகளைப்பெறும் கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகிறது.
 
 ஞாயிற்றுக்கிழமை ஆறாம் ஏழாம் வட்டாரங்களுக்கும்
மூன்றாம் நான்காம் வட்டாரங்களுக்கும் மக்கள் ஆலோசனைக்கூட்டம் தவிசாளர் கி.ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றன.
 
சனிக்கிழமை  மாவடிப்பள்ளி மாளிகைக்காடு 3 வட்டாரங்களுக்கான கூட்டங்கள்
தவிசாளரின் ஏற்பாட்டில் அந்தந்த வட்டார உறுப்பினர் தலைமையில் நடைபெற்றன.
 
அத்தனை கூட்டங்களுக்கும் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் சபை
உத்தியோகத்தர்கள் சமுகமளித்து பூரணவிளக்கமளித்தனர்.
 
சிலவட்டாரங்களில் அந்த உறுப்பினர்களால் மக்களுக்கு உரியவாறு தெரியப்படுத்தப்படவில்லையெனத்தெரிவிக்கப்படுகின்றது.