சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்த்துகை கலை

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கட்புல மற்றும் தொழிநுட்பபீடத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஆற்றுகை கலைஞர்களின் பங்குபற்றுகையுடன் ஆற்றுகைக்கலை பயிற்சி பட்டறையுடன் கூடிய செயற்காட்சி எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இங்கே பயிற்சி பட்டறையானது சு வி அ க நிறுவகத்திலும் அதன்பின்பு செயற்காட்சியானது பிற்பகல் 4 மணியளவில் கல்லடி கடற்கரையிலும் நிகழவுள்ளது. இவ்வாற்றுகை நிகழ்வுக்காக இலங்கையை சேர்ந்த பிரபல ஆற்றுகைக்கலை கலைஞர்களுடன் பல சர்வதேச கலைஞர்களும் பங்குபற்றுகின்றனர்.
இந்நிகழ்வானது மாணவரிடையே மடடுமல்லாது பொது மக்களிடத்தேயும் சமகால கலை வேலைப்பாடு தொடர்பான அறிவை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.