பால்மாவின் விலை அதிகரிப்புக்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை அளித்துள்ளது

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது.இதற்கமைவாக ஒரு கிலோகராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக 860 ரூபாவாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் 345 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

பால்மாவிற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.