இன்று களைகட்டும் கச்சதீவு !

காரைதீவு நிருபர் சகா
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று  (16) இடம்பெற உள்ள நிலையில் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று (15) குறிகட்டுவான்  இறங்கு துறையில் இருந்து காலை 7.45  மணியளவில் முதலாவது படகுச்சேவை ஆரம்பமானது.மேற்படி ஆலய வருடாந்த திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்ததுடன் 100க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அப்பகுதியில் ஈடுபடுவதற்காக வடதாரகை படகு மூலம் அப்பகுதிக்கு  சென்றனர்.

இதில் மிக முக்கியமாக இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரம் வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 200 பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உற்சவத்திற்காக மக்களின் நலன் கருதி  நேற்று(15) அதிகாலை 3.30 மணிமுதல் யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் குறிகட்டுவானை நோக்கிப் புறப்பட்டதுடன்   அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அதேபோன்று 16 ஆம் திகதி காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பஸ் சேவைகள் நடாத்தப்படும்.மேலும் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் மற்றும் வசதி கருதி கூடுதலான பஸ் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு குறிகட்டுவானிலும் நீர் மலசல கூட வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள