கண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள்

;பொன்ஆனந்தம்
கண்ணகி தனது கணவனுக்கு நடந்த கொடுரத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்தாள் என்பது தமிழர்களின் பூர்விக புராணக்கதையாகவுள்ளது. இந்த கல்முனை நகரத்திலும் அவருக்கு இன்று வழிபாடு செய்யும் மரபும் ஆலயமும் உள்ளன. அவ்வாறு நோக்குககையில் எமது வடகிகழ்கில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணகைகள் விடும் கண்ணீருக்கும் அரசும் நாம் அனைவரும் பொறுப்புச்சொல்லியாக வேண்டும் என இளைஞர் அபிவிருத்திஅகத்திக் மதியுரைஞர் பொன் சற்சிவானந்தம் தெரிவித்தார். கல்முனை கடற்கரையில் நேற்றுமாலை நடந்த அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பெண்கள் தின நிகழ்வும் மரம் நாட்டு நிகழ்விலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப்பிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ்,தென்கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ,கல்முனைப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளுவின் இணைப்பாளர் ஆர் இசைடீன் உட்பட பல பிரதேச செயலகபிரிவு பெண்களும் கலந்துகொண்டனர்.
இங்குமேலம்பேசிய அவர்குறிப்பிடுகையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் எமது கண்ணகிகள் இன்னும் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
அவர்களின் துன்பதுயரங்களை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும் இது ;போன்றவர்களின் துன்பங்களுக்கு அரசும் நாமும் முறையான தீர்வைக்காண முன்வராத விடத்து இந்த நாடு அவர்களது சாபத்தில் இருந்து மீழாது
அவ்வாறு இல்லையெனில் அந்தக்கண்ணகியின் கதையும் வழிபாடும் பொய்யானதாகிவிடும் எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களின், நலனில் நாம் அனைவுரும் கவனம் செலுத்தியாகவேண்டும்
அவர்களின்துன்பங்களுக்கு படிபடியாக தீர்வுகாண குரல் கொடுக்க வேண்டும் இதற்கு கட்சிபேதங்களை மறந்து சகல கட்சிகளும் மக்களின. நலன்கருதி,பாதிக்கப்பட்ட பெண்களின்நலன்கருதி உதவ முன்வரவேண்டும் எனவும் கோரிக்கiவிடுத்தூர்.