காவடி எடுப்போரும்,காவடிக்கு முள்ளுகுத்துவோருக்கும் இனி மருத்துவ பரிசோதனை.

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடி எடுப்போர் மற்றும் காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.சாவகச்சேரி சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. அது தொடர்பில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள்ளு குத்துவோர் மற்றும் காவடி எடுப்போர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார முறைகளை பேணாத முட்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கட்டாயம் அவர்கள் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTN