திருமலையில் மரம் நாட்டிய நடிகர் விவேக் .

மூதூர் நிருபர்
சின்னக்கலைவாணர் விவேக் அவர்கள் திருகோணமலையிலும் மரமொன்றை வைபவரீதியாக நாட்டிவைத்தார்.
செவ்வாயன்று திருகோணமலைக்கு விஜயம் செய்த தென்இந்திய நடி கர் விவேக் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் அலயத்திற்கும் விஜயம் செய்தார். இவரை வரவேற்ற ஆலய தர்மகர்த்தா இ.இராதாகிருஸ்ணணன் ஆலயம் தொடர்பாக விளக்கமளித்ததுடன் ஆலய சூழலில் தனது வருகையைபதிவு செய்யும் வகையில் மரக்கன்றொன்றையும் நாட்டிவைத்தார்
இதன்போது ஆலய தர்மகர்த்தாவுடன்  நடிகர் விவேக் நிற்பதனை படத்தில் காணலாம் .