நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

 

அதன்படி பெற்றோல் ஒரு லீற்றர் 3 ரூபாவினாலும், டீசல் ஒரு லீற்றர் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 129 ரூபாவாக இருந்த  பெற்றோல் 92 ஒரு லீட்டர்  132 ரூபாவாகவும் 156 ரூபாவாக இருந்த பெற்றோல் 95,  ஒரு லீட்டர்  159 ரூபாவாலும் உயர்த்தப்படவுள்ளது.

அத்தோடு ஒரு லீட்டர் ஒடொ டீசல் 104 ரூபாவாகவும், ஒரு லீட்டர் சுப்பர் டீசல்  134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.