கல்முனை தமிழ் பிரதேச செயலக இந்துக் கோவில்; நீதிமன்ற தீர்ப்பு ஏப்ரல் 30

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவிலை அகற்ற உத்தரவிடக் கோரி கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றகீப்பால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட உள்ளது.

இவ்வழக்கு காரண காரிய தொடர்பு சம்பந்தப்பட்ட விசாரணைக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் இன்று (12) எடுத்துக்
கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நீதிவான் ஐ. என். ரிஸ்பான் நீதிமன்றத்தின் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவித்தார்