ஆசிரியருக்கான ஆலோசனை சேவை உருவாக்கப்படல்

ஆசிரியர் ஆலோசகர் சேவையை நிறுவுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று இதனைத் தெரிவித்தார். ஆசிரியர்களுக்காக சம்பளக் கொடுப்பனவு கட்டமைப்பொன்றும் முன்வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.