29வருட அரசேவையில் இருந்து ஓய்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தினைச் சேர்ந்த முருகுப்பிள்ளை குணரெத்தினம், 29வருட அரசேவையில் இருந்து இன்றுடன்(12) ஓய்வு பெறுகின்றார்.

1990ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தினைப்பெற்றுக்கொண்ட இவர், மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, அரசடித்தீவு ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், கச்சக்கொடி, அம்பிளாந்துறை, வால்கட்டு ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெறுகின்றார்.
அரசசேவையோடு சமுகசேவையிலும் நாட்டம் கொண்ட இவர், பல சமுக அமைப்புக்களின் நிருவாகியாகவும் இருந்து சேவையாற்றி வருகின்றார். மேலும், இலக்கியத்துறையில் ஆர்வம்செலுத்திய இவர், கவிதை, மேடைப்பேச்சு, நாடகநெறியாள்கை போன்ற துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.