கொக்கட்டிச்சோலை காவல்பகுதியிலிருந்து கசிப்பு உற்பத்தியை இல்லாமலாக்க நடவடிக்கை – பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வஹாப்

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெறுகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையின் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பில் வினவிய போதே இதனைக்குறிப்பிட்டார்.

எமது கடமைப்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை காவல்பிரிவில் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை முற்றாக இல்லாமல் ஆக்குவதே எமது நோக்கமாகும். இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் சமுகத்திற்குள்ளே பாரியளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும். இதற்காக அனைத்துதரப்பினருடனும் இணைந்து, அவர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்று சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை ஒழிப்பதற்காக விசேட செயற்பாடுகளையும் முன்னெக்கவுள்ளோம். தற்போதும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குதொடர்ந்தும் வருகின்றோம் என்றார்.