மிதக்கும் படகு திருத்தும் சேவை

கதிரவன் திருகோணமலை

வோல்கர்ஸ் கொழும்பு றிங்கோ சி;ப்யாட் நிறுவனம் ஆழ்கடல் படகுகளை திருத்தும் வேலைகளுக்காக மிதக்கும் திருதும் படகு சேவையினை இலங்கையில் முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை 2019.3.10 திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்தில் தொடக்கி உள்ளது.

21 அடி நீளமும், 12 அடி அகலமும், 15 மீற்றர் உயரமும், 5 மீற்றர் நீரில் அமிழக்கூடியுதுமான படகு இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 மில்லியன் பெறுமதியான இப்படகு சேவை மூலம். மீ;ன்பிடி படகுகளை கடலில் வைத்து பழுது பார்க்க கூடியதாக இருக்கும்.

இதுவரை காலமும் பழுதடைந்த படகுகளை பாரம்தூக்கிகள் மூலம் தூக்கியே கரையில் வைத்து திருத்தும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இதனால் சில சந்தர்ப்பங்களில் படகுகள் சேதத்திற்கு உள்ளாகும் நிலைமையும் காணப்பட்டது. இப்திய சேவை மூலம் படகுகளுக்கு சேதம் இன்றி பாதுகாப்பாக திருத்தக்கூடிய நிலை தோன்றி உள்ளது.