கையெழுத்து சேகரிப்பும், கண்டன ஊர்வலமும்.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள பெற்றோர்களால் திருகோணமலையில் சனிக்கிழமை 2019.03.09 காலை கையெழுத்து சேகரிப்பும் கண்டண ஊர்வலமும் நடத்தப்பட்டது. இதில் மட்டக்களப்பு, வவுனியா. கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்ட பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டர். காலை 10.30 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் கையெழுத்து சேகரிப்பு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு முற்றவெளி மைதானத்தில் இருந்து பத்திரகாளி அம்பாள் ஆலயம் வரை கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டு அங்கு பிராத்தனையும் இடம்பெற்றது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.