கிளிநொச்சியில் தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பல தசாப்தங்களாகநீதி வழி நின்று போராடி வருகின்றோம். சொல்லொணாத்துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும்இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதிமறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாகவாழ்கின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்துவருகிறோம்.

மூன்று தசாப்தங்களாக தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமைமீட்புப் போராட்டம் துரதிஸ்டவசமாக 2009 மே மாதத்தோடுமௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள்நிறைவுபெறுகின்றன. இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கானதீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும்இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை,வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள்விடுவிப்பு போன்ற விடயங்களில் ஆட்சி அதிகாரத்திற்குவருகின்ற அரசாங்கங்களின் தொடர்ச்சியான ஏமாற்றுநாடகமும் அரச எதிர்ப்பில்லாத தமிழ் அரசியல் தலைவர்களின்நிலைப்பாடும் தமிழ் மக்களாகிய எமது மனதில் ஆறாதகாயத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இனவிடுதலையை முதன்மைப் படுத்தி, நீதியின் வழி நின்றுசெயலாற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கரங்களைப்பலப்படுத்தி தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவவேண்டியது காலத்தின் கட்டயாமாகிறது .

மதிப்புக்குரிய கிளிநொச்சி வாழ் மக்களே,

தமிழர்களின் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்புக்களின்தலைமையகமாகவும் தமிழர்களின் அரசியல் கோட்டையாகவும்கோலோச்சிய கிளிநொச்சி மாநகரம் தொடர்ந்தும் கொள்கைவழிநின்று, இனவாத சக்திகளினதும் அதற்குத் துணைபோகும்தரப்புகளினதும் சதிவலைகளை முறியடித்து  மண்ணின்மகத்துவத்தைக் காத்து தமிழ்த் தேசிய விடுதலையைமுன்னெடுப்பதில் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்றநம்பிக்கையில் கிளிநொச்சியில்  தமிழ்  மக்கள் கூட்டணியின்மக்கள்  பணிமனை 10-03-2019 அன்று காலை 10 மணிக்குதுர்க்கை அம்மன் வீதி இல 168 ஆனந்தபுரம் கிளிநொச்சியில்கட்சியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்படுகின்றது. இந்நிகழ்விலும் கட்சி சார்செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியத்தை பலப்படுத்தும் பணியில்எம்மோடு பயணிக்க அனைவரையும் அன்புரிமையுடன்அழைக்கின்றோம்.

தன்னாட்சி தற்சார்பு தன்னிறைவு.

நன்றி

தமிழ் மக்கள் கூட்டணி

கிளிநொச்சி மாவட்டம்