மதப்பற்று அவசியம் ஆனால் அதுவே மதவெறியாகக்கூடாது! திருக்கேதீஸ்வரசம்பவத்திற்கு கண்டனம்

ஒவ்வொருவருக்கும் தத்தமது மதம் மீது பற்று இருக்கவேண்டும். அதில் மாறுபட்டகருத்திற்கிடமில்லைஆனால் அதுவே மதவெறியாக மாறிவிடக்கூடாது. அதன் ஓரங்கமே திருக்கேதீஸ்வர பதாதை தகர்ப்புச்சம்பவம். இதனை வன்மையாகக்கண்டிக்கிறேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் ஆன்மீகநெறி பரோபகாரியுமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
சிவராத்திரியையொட்டியதாக திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பினாலான வரவேற்பு வளையி பட்டப்பகலில் பலர் பாhத்திருக்க ஒரு மதவெறிக்கும்பலினால் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்துக்களது மனங்களை புண்படுத்தும் காரியமாகும்.
ஒரு மொழியைப்பேசுகின்ற இருசாராரிடையே ஒற்றுடை புரிந்துணர்வு விட்டக்கொடுப்பு இல்லையென்றால் பலஇனங்கள் பலமொழிபேசுவோர் வாழும் இலங்கைத்திருநாட்டில் எவ்வாறு நிரந்துர சமாதானத்தை ஜக்கியத்தை எதிர்பார்ப்பது?
எந்தச்சமயமென்றாலும் மனிதன் வாழ்வாங்குவாழ நெறிப்படுத்தி வழிகாட்டுவதாகும். எனவே சமயநெறிநின்று சிந்தித்தால் இந்ததுர்ச்சம்பவத்தை அனுமதிக்கலாமா?
இதனால் இந்துவோ கிறஸ்தவரோ வென்றுவிடவுமில்லை தோற்றுவிடவுமில்லை. ஒட்டுமொத்தமுழு தமிழினத்திற்கும்தான் இந்த அவமானம்.
இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடவேண்டாமென்று .உங்களை இருகரம்கூப்பி வேண்டுகின்றேன்
இந்தச்சம்பவத்தை செய்தவர்கள் யாராகஇருந்தாலும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும். இது தொடராவண்ணம் காவல்துறை தமது கடமைகளை செவ்வனே புரியவேண்டும்.