தாய்ப்பால் புரைக்கேறி பெண் சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக, இரண்டு மாத வயதுடைய பெண் சிசுவொன்று மரணித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில், மாவடிவெம்பு – 2, சுந்தரம் வீதியை அண்டி வசிக்கும் துரைசிங்கம் தர்மிகா என்ற சிசுவே மரணித்துள்ளது.

சம்பவ தினம் இரவு, தாய் வழமைபோன்று தனது குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டித் தூங்க விட்ட சற்று நேரத்தில், சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதும் சிசு ஏற்கெனவே மரணித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலம், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.