திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் புனரமைக்கப்பட்ட 33 அடி சிவன்

;பொன்ஆனந்தம்
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் புனரமைக்கப்பட்ட 33 அடி சிவன் சிலை திறப்பு விழா கோணஸ்வரத்தில் இன்று காலை 9.00மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம்,சுசந்தபுஞ்சிநிலமே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வைபவரீதியாக சிலையை சிவராத்திரி தினமான இன்று திறந்து வைத்தனர்.

; சிலையை புரருத்தாரணம் செய்து வைத்த ஆச்சாரியார் சிவசோதிலிங்கம் தலமையிலான ஸ்தபதிகளும் விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வுகள் ஆலய பரிபாலனசபை செயலாளர் ப.பரமேஸ்வரன் தலமையில் நடைபெற்றது. இப்பணியை முன்னின்று செய்வித்த நிருவாகத்தின் பிரதிநிதி நாகலிங்கம்சந்திரசேகரன் பாராட்டி பொன்னடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள்கலந்துகொண்டனர் இங்கு ஸ்தபதி சிவசோதிலிங்கம் மங்களவிளக்கேற்றுவதனையும் விருந்தினர்கள் மலரஞ்சலி செய்வதனையும் கலந்துகொண்டபக்தர்களையும் திறந்துவைக்கப்பட்ட சிவபெருமானையும் படங்களில்காண்க.