ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் சம்பியன் திருகோணமலை

மருதமுனை சொனி மெக்ஸ் விளையாட்டு கழகம் 40 வயதுக்கு மேற்பட்ட கழகங்களுக்கு இடையே முக்கோண உதைந்தாட்டம் போட்டியை கடந்த ஞாயிற்றுக்கிழமை 2019.02.24 நடத்தியது. இதில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் அணி, அம்பாறை வேற்றன்ஸ் அணி, மருதமுனை சொனி மெக்ஸ் கழகம் என்பன லீக் முறையில் மோதின.

இறுதி;போட்டி திருகோணமலை ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் அணிக்கும் மருதமுனை சொனி மெக்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் அணி மருதமுனை சொனி மெக்ஸ் அணியினரை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனானது. இதில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் அணி வீரர் நிமால் சாந்த சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சம்பியனான ஒலிம்பிக்ஸ் மாஸ்ரர்ஸ் அணியினரை படத்தில் காணலாம்.