சைக்கிள் சவாரி திருகோணமலை

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 2020 வருடம் நூறுவருடங்களாகிறது. இதனைக்குறிக்கும் முகமாக முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை மூன்றுநாள் நட்புறவு பாசறை நடத்தப்பட்டது.

இதில் யாழ்பாணம் புனித ஹென்றி அரசர் பாடசாலை சாரணர்களும் புனித சூசைய்ர் கல்லூரி சாரணர்களும் இணைந்து பங்கு கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை 2019.03.03 சாரணர்களின் சைக்கிள் சவாரி நடத்தப்பட்டது. சாரணர் ஆசிரியர் அ.அகிலன் ஏற்hடு செய்த இம்முகாமில் திருகோணமலை நகர சபை உறுப்பினர் ஜஸ்ரின், மாவட்ட சாரணர் தலைவர் சி.காண்டீபன் ஆகியோர் இந்த சைக்கிள் சவாரியை ஆரம்பித்து வைத்தனர்.