அனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.

மானிய உரம் வழங்கபபடுவதில் குறைபாடுகள் பல முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் முதன் முதலில் மானிய உரம் வழங்கியது மட்டக்களப்பு மாவட்டமே. இலகுவாகவும் விரைவாகவும் கிடைத்துவிட்டது என்பதற்காக சந்தேகக்கண்கொண்டு பார்க்கக்கூடாது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட- கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்ச கல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டத்திலேயே இதனைத தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற இக் கூட்டத்தில், மானிய உர விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக விவசாயிகளால் குற்றச்சாட்டுக்கள் முன்வைன்னப்பட்டன. அவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், அரசாங்கம் ஒருவருக் குஒரு வகை என்று பிரித்து வழங்கவில்லை. எல்லோருக்கும் பொதுவாகவே மானிய உரத்தினை வழங்குகிறது. கடந்த வருடத்தில் இலங்கையிலேயே முதன் முதலில் வழங்கிய மாவட்டம் மட்டக்களப்பு.
சில வேளைகளில் நேர காலத்துக்கு உரமம் வழங்கப்பட்டதனாலோ என்னவோ விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் உரம் மட்டக்களப்புக் குவிஜயம் செய்த அதிகாரிகள் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டு உரம் பெற்றுக்கொள்ளப்படாமலிருந்ததை அவதானித்திருக்கின்றனர். அவ்வாறானனால் தேவைக்கு அதிகமாக மானிய உரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் நஞ்சற்ற விவசாயத்தினை ஊற்குவித்து உற்பத்திகளை வெளிக்கொணர்வதற்காக சேதன உரத்தினை ஊக்குவித்து வருகிறது. ஆனால் நாம் யூரியாவைப்பயன்படுத்தி, இரசாயனத்தினைப் பாவித்து உயிர்களை ஆபத்துக்குட்படத்தும் பயிரிடலில் கூடுதலாக ஈடுபடுகின்றோம்.
நமது மாவட்டத்தில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள. அதற்கு சூரிய மின் சக்தி நிலையம் ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் மக்களது கருத்துக்களைப் பெறும் விஜயம் மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஒருவர் அதனால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அவ்வாறானால் அனேகம் பேருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கும்.
வெறும் அனுமானங்களை வைத்துக் கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக்கூடாது. சரியாக ஆராய்ந்து கருத்துக்களை குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சிறப்பாக இருக்கும். இந்த மானிய உர விநியோகம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதும் அவ்வாறுதான். நாங்கள் இது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
இக் கூட்டத்தில்பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் கி.ஜகன்நாத், விவசாயப் பணிப்பாளர், திணைக்களப் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, விவசாய வேலைகள் ஆரம்பம், விதைப்பு முடிவு கால்நடை அகற்றல், முதல் அறுவடை வரையான விடயங்கள் தொடர்பில் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.