தேவை நாடும் மகளீர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பில் நிறைவு: நாமல் ராஜபக்சவும் பங்கேற்பு

கொழும்பு சீதுவவில் கடந்த 28 ம் திகதி ஆரம்பித்த தேவை நாடும் மகளீர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான துவிச்சக்கர வண்டி சவாரி  மட்டக்களப்பில் இன்று (03.03.2019) ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்தது.
தேவை நாடும் மகளீர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக துவிச்சக்கர வண்டி சவாரி கொழும்பு சீதுவவில ஆரம்பித்து  புத்தளத்திற்கு சென்று அங்கிருந்து அநுராதபுரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து பொலநறுவவையை சென்று அங்கிருந்து இன்று  (03.03.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நிறைவடைந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜகபக்ச உள்ளிட்ட் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து பிரித்தானியா , இந்தியா போன்ற நாடுகளைச் 30 பேர் இந்த சைக்கிள் சவாரியில் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் வைத்து வரவேற்கப்பட்டனர். இவர்களுக்கு தேவை நாடும் மகளீர் அமைப்பின் பிரதி நிதிகள் மலர்ச் செடிகளை வழங்கி வரவேற்றனர்.
இதன் போது தேவை நாடும் மகளீர் அமைப்பின் இணைப்பாளர் சந்திரா தியாகராசா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜகபக்ச மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் உட்பட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பகுதி பொறுப்பதிகாரி மற்றும் தேவை நாடும் மகளீர் அமைப்பின் மட்டக்களப்பு பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.