188 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

மட்டக்களப்பில் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது தடைசெய்யப்பட்டுள்ள 188 சட்ட விரோத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

 

மீட்கப்பட்டுள்ள மீன்படி வலைகளில் 150 அடி நீளமான 9 வலைகளும், 100 அடி நீளமான 179 வலைகளும் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சட்ட விரோத மீன்படி வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டகளப்பு உதவி மீன்வள பரிசோதனை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.