இன்று உலகசைவத்திருச்சபை பாதயாத்திரை கேதீஸ்வரத்தில்

9தினங்கள் 123கி.மீற்றர் கடந்து நாளைசிவராத்திரியில் பாலாபிசேகம்!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
சிவராத்திரியைமுன்னிட்டு உலக சைவத்திருச்சபை வருடாந்தம் நடாத்திவரும் யாழ்ப்பாணம் – திருக்கேதீஸ்வரம் பாதயாத்திரை இன்று(3) ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கேதீஸ்வரத்தை சென்றடையவுள்ளனர்.

 
கடந்த 23ஆம் திகதி யாழ்.செல்வச்சந்நதி முருகனாலயத்திலிருந்து வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இப்பாதயாத்திரைக்குழுவினர் மறுநாள் நல்லூர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நேற்றுமுன்தினம்(1) கோவில்குளத்தில் தங்கி நேற்று(2) சனிக்கிழமை பாப்பாமோட்டையில் தங்கினர்.
 
உலகசைவத்திருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் சுமுகலிங்கம் ஜயாவின் நெறிப்படுத்தலில் கடந்த 9தினங்களாக 132 கிலோமீற்றர் தூரத்தைக்கடந்து இன்று காலை அடம்பனை அடைந்து மாலை திருக்கேதீஸ்வரத்தை அடைவார்கள்.
 
தொடர்ந்து நான்காவது வருடமாகத் தொடரும் இப்பாதயாத்திரைக்குழுவினர் இன்று சிவலிங்கத்தை பாலாவியில் வைத்து தீர்த்தமாடுதலுடன் நாளை(4) சிவராத்திரியன்று பாலாபிசேகம் செய்யவுள்ளனர்.
 
35பக்தர்கள் பங்கேற்கும் இப்பாதயாத்திரைக்குழுவினர் வரும்வழியில் வெள்ளாங்குளச்சந்தியில் சிவலிங்கமொன்றை மக்கள் வழிபாட்டிற்காக பிரதிஸ்டை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.