மத்திய அரசால் முடியாததை பலமாக இருந்ததனால் சாதித்துள்ளோம் – கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன்

(க.கிஷாந்தன்)

கடந்த மூன்று ஆண்டு காலங்கள் உங்களுக்கு தெரியும் மத்திய மாகாணத்தில் நாங்கள் பலமாக இருந்ததனால் மத்திய அரசில் சாதிக்க முடியாத விடயங்களை கூட நாங்கள் மாகாண அமைச்சினூடாக சாதித்திருக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் எமது சமூகத்தினை முன்னேற்றுவதற்கு ஒரு காரணியாக இருந்த கல்விக்காக நாங்கள் சுமார் இருபதாயிரம் லட்சம் ரூபாயினை செலவு செய்திருக்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாகாண அமைச்சுக்கு தேவையான அளவு நிதியினை வழங்கினார். அதில் இன்று பல கட்டடங்கள் கட்டப்பட்டன. மாகாண அமைச்சு இல்லாவிட்டாலும் கூட இன்று அதனை திறந்து வைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் மாகாண சபையில் நாங்கள் ஒற்றுமையாக செயப்பட்டதன் காரணமாகவே.

இந்த வருடம் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட கட்டங்களை திறந்து வைத்துள்ளோம்.கடந்த வாரம் கூட என்பீல்ட் தோட்டத்தில் இது போன்று கட்டடம் ஒன்றினை திறந்து வைத்துள்ளோம்.

அதற்கு காரணம் நீங்கள் எங்களை நம்பியிருக்கின்றீர்கள். ஸ்தாபனம் பலமான ஸ்தாபனம், அதற்கு தலைவராக இருக்கும் ஆறுமுகன் தொண்டமான் பலமானவர், அவர் எதையும் சாதிக்க கூடியவர். அதனால் தான் இன்று கூட அவரது வேண்டுக்கோளுக்கிணங்க பல உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கும் போது நாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போல், நாங்கள் வெற்றி பெற்றால் உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம், என்றதற்கமைய இன்று ஜனாதிபதி அவர்கள் தலைவரின் வேண்டுக்கோளுககிணங்க பல கோடிக்கணக்கான நிதியினை பெற்றுக்கொடுதிருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை கட்டாயம் உங்களுக்கு செய்வோம், என மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம் ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் சுமார் 20 லட்சம் ரூபா செலவில் அக்கரபத்தனை ஆட்லோ தோட்டத்தில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமறிப்பு நிலையத்திரைன  01.03.2019 அன்று மாலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சத்திவேல், முன்னாள் நுவரெலிய பிரதேச சபை தலைவர் சச்சிதாநந்தன், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கட்டத்திற்கு மறைந்த தலைவர் சௌமிய மூரத்தி தொண்டமான் சிறுவர் பராமறிப்பு நிலையம் என பெயர் சு+ட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.