ஆசிரிய ஆலோசகர்களின் பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம்

நாடளாவியரீதியில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின்
பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம் நேற்று(01) வெள்ளிக்கிழமை ஏழாவது
நாளாகத் தொடர்ந்தது.
இலங்கை சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள் தொழிற்சங்கம் இதற்கான
ஏற்பாட்டைச்செய்துள்ளது.
இதனால் வலயமட்டச்செயற்பாடுகள் பாடசாலை மேற்பார்வைகள் போட்டி நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜ.தரிசிப்பு குழுத்தரிசிப்பு வெளிவாரி மேற்பார்வை அனைத்தும் செயலிழந்துள்ளன.
மேலும் சமகாலத்தில் நடாத்தப்படவேண்டிய கோட்டமட்ட
தமிழ்மொழித்தினப்போட்டிகள் நிறுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
தமக்கான நிரந்தரமாக  இலங்கை ஆசிரியர்ஆலோசகர் சேவையை மேலும் தாமதிக்காமல் உடனடியாக அமுலுக்குகொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இன்னும் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தேசிய தமிழ்ப்பிரிவு இணைப்பாளர் செல்லையா பிரபாகரன் தெரிவித்தார்.
சம்மாந்துறை வலய ஆசிரியர் ஆலோசர்களின் கூட்டம் சம்மாந்துறை
அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் ஆசிரியஆலோசகர் சங்கப்பிரதிநிதி
எம்.ஜ.ஹஜ்ஜி மொகமட் மௌலவி தலைமையில் நடைபெற்றது.