எல்லாப் பூக்களுமே அழகுதான்’ நூல்வெளியீட்டுவிழா!

நாடறிந்த எழுத்தாளர் இலக்கியமாமணி மர்ஹூம் அ.ஸ.அப்துஸ்ஸமது நினைவாக அவரின் புதல்வன் அ.ஸ.அகமட்கியாஸ் எழுதிய ‘எல்லாப் பூக்களுமே அழகுதான் ‘ என்ற வாழ்வியலுக்கான அறிவியல்சிந்தனை நூலின் வெளியீட்டுவிழா இன்று 2ஆம் திகதி சனிக்கிழமை
அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறைவலய நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் அகமட்கியாசின் இரண்டாவது நூல் இதுவாகும்.  ‘யன்னலைத்திற’என்ற நூல் இவரது முதல்நூலாகும்.
மணிப்புலவர் மருதுர் எ மஜீட் தலைமையில் நடைபெறவுள்ள
இந்நூல்வெளியீட்டுவிழாவிற்கு பிரதமஅதிதியாக முன்னாள் அமைச்சரும்
தேசியகாங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் எ.எல்.எம்.அதாவுல்லா
கலந்துசிறப்பிக்கவுள்ளார்.
கௌரவஅதிதிகளாக அக்கரைப்பற்று மாநகரமேயர் எ.அஹமட்ஸக்கி
கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் விசேடஅதிதிகளாக
தென்கிழக்கு பல்கலைக்கழகத் தமிழத்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல்
பேராசிரியர் எ.எம்.முஸாதிக் கிழக்குபல்கலைக்கழகசிரேஸ்ட்ட விரிவுரையாளர்; றூபிவலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள். சிறப்பதிதிகளாக மேலும் பலர் கலந்துகொள்வார்கள்.
விழாவில் ”ஆ.ஸா. இலக்கியமாமணி ‘விருதுப்பட்டம்’ வழங்கும் விருதுப்பட்டய தொடர்நிகழ்வின் முதல் விருதை பொன்விழாக்கண்ட கவிஞர் அன்புடீன் பெறுவதோடு ‘கவி ஒலி’ என்ற பட்டத்தையும் பெறவிருக்கிறார். அதனை சொற்கொல்லர் முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.ஸேகுஇஸ்ஸதீன் வழங்கிசிறப்பிப்பார்.
வெளியீட்டுரையை கவிஞர் பாலமுனைபாறுக் ஆய்வுரையை பேராசிரியர்
றமீஸ்அப்துல்லா நயவுரையை றூபிவலன்ரீனாபிரான்சிஸ் வாழ்த்துரையை
வயலக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் ஆகியோர் வழங்குவார்கள்.
நிகழ்ச்சித்தொகுப்பை வானொலிஅறிவிப்பாளர் எ.எம்.அன்வர் சிஸேட ஊடகவியலாளர்வி .ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்துவர்.