தூக்கு தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்

தூக்கு தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 101 விண்ணப்பங்கள் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதுடன் அமெரிக்கர் ஒருவரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் நேர்முக பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அலுகோசு பதவியின் தன்மையை கருத்திற் கொண்டு நேர்கமுக பரீட்சைக்கு அழைக்கப்படுவர்கள் மற்றும் தெரிவு செய்யப்படுபவர்கள் தொடர்பான விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது