தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மேலும் தெற்கு மக்களின்  பிரச்சினைகள் தொடர்பில் இரா. சம்பந்தன் எந் நிலையிலும் கருத்துரைக்கவில்லை. வடக்கு மக்களை  காரணம் காட்டியே அவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அவர் குற்றஞ் சுமத்தினார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.