கபாலியின் அட்டகாசம் காரணமாக மாவிலங்குகு துறை பகுதியில் மக்கள் கடும் அச்சம்.

ஆரையம்பதி கிளைக் கிராமமான மாவிலங்குதுறை கிராமத்தில் இரவு நேரங்களில் மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கபாலி என்று அழைக்கப்படுகின்ற ஒரு பெயருடைய நபர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இறங்கி மக்களின் சொத்து உடமைகளை கூரைகளால் இறங்கி மக்களின் சொத்துக்களை களவாடி செல்கின்றான்.

இவனுக்கு பொலிசாரும் உடந்தையாக இருக்கின்றார்கள் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஆரையம்பது பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு க் கூட்டத்தில் இது தொடர்பாக மக்கள் இணைத்தலைவரான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர். ஞா.ஸ்ரீநேஷன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கபாலியின் பிரச்சனை பெரிது இரு சமூகத்தினராலும் பெரிதும் பேசப்பட்டடு அனைவரினதும் கவனதிற்கு கொண்டுவரப்பட்டதன் காரணமாக இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிக்கு தெரிவிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நபர் பல தடவைகள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியோடு பலதடவைகள் இவர் வெளியில் நடமாடி திரிவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.