சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் கம்பவாரிதி

(சிவம்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் நேற்று (24) கல்லடி மீன் இசைப் பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்லடிப் பாலத்தின் அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலைக்கு கொழும்பு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் மலர் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து கலைக் கோகிலம் மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தாய்மொழியின் தொன்மை பற்றி கம்பவாரிதி சொற்பொழிவாற்றினார்.

வரவேற்புரையை மாநகரசபையின் கலைக் குழுத்தலைவர் வே.தவராஜா, தமிழ்மொழி இன்னும் இனியும் தலைப்பில் அருட்தந்தை அ.அ. நவரட்ணம் நவாஜி, கவிதைப்பொழிவுகள். அண்ணாதாசன் கி;துரைராசசிங்கம் கதிரவன் த. இன்பராசா நிகழ்த்தியதோடு மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் நன்றியுரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்இ ஞா.சிறிநேசன் மற்றும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வாழ்த்துரையை வழங்கியதோடு கம்பவாரிதி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்..