எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களையும், கலை கலாசார அம்சங்களையும் தற்போது நாங்கள் கைவிட்டிருக்கின்றோம்.

எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களையும், கலை கலாசார அம்சங்களையும் தற்போது நாங்கள் கைவிட்டிருக்கின்றோம் – மட்டு.அரசாங்க அதிபர்.

மொழி, கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தொலைத்ததினாலேதான் நாங்கள் அவற்றை மீளத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களையும், கலை கலாசார அம்சங்களையும் தற்போது மேலைத்தேயவர்கள் வைத்திருக்கின்றார்கள். மாறாக அதனை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம். யோகாசனம் உலகிலே அதிகம் பணம் சம்பாதிக்கக் கூடிய துறையாக அது இருக்கின்றது. தற்போது அதனை எமக்கு வந்து சொல்லித்தருபவர்கள் வெள்ளைக்காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எமது யோகிகளும், முனிவர்களும், எமக்கு அதனைக் கற்றுத்தந்திருக்கின்றார்கள். எமது மூதாதையர்கள் எமக்குக் கற்றுத்தந்த நல்ல பாடங்களை நாங்கள் மறந்து விட்டோம். எதிர்காலத்திலே அவற்றை எமது இளம் சமூதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கிராம சக்தி வாரத்தின் இறுதி நாள் கலாசார தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் எருவில் கிழக்கு கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை (24) மாலை இடம்பெற்றது.
எருவில் கிழக்கு வரையறுக்கப்பட்ட விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பொ.பத்மநாதன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன், உதவிப் பிரதேச செயலாளர், மற்றும் கிராம பொதுமக்கள் அரச உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்….
இந்நாட்டிலே உள்ள வறுமையைத் தணிப்பதற்காகத்தான் ஜனாதிபதி அவர்களால் கிராம சக்த்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து 1950 ஆம் அண்டிலிருந்து ஜனசவிய, உணவுமுத்திரை, சமூர்த்தி, என பல்வேறு வறுமை ஒழிப்புத்திட்டங்கள் இந்த நாட்டிலே முன் வைக்கப்பட்டன. இருந்தபோதிலும் நாட்டிலுள்ள மக்கள் வறுமை நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அவதானித்த தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை 2017 இலே ஆரம்பித்தார். அந்த வகையில் இலங்கையிலே இருக்கின்ற 345 கிராம பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்,  ஒவ்வொரு பிரதேச செயலாளர் கிராமத்திற்கும் இலங்ககையிலே 1000 கிராமங்களைத் தெரிவு செய்து, அந்த கிராமங்களிலே வறுமை ஒழிப்புத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்வந்தார்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், தலா 3 கிராமங்கள் வீதம் 42 கிராமங்ளை இனம்கண்டு, இச்செயற்றிட்டத்தை 2017 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் ஒரு உற்பத்திக் கிராமமும், 2 சமுதாய அடிப்படைக் கிராமங்களும், தெரிவு செய்யப்பட்டன.
2019 ஆம் ஆண்டு ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு 9 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, கிலங்கை பூராகவும் 4000 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வருடம் இத்திட்டத்திலே உள்வாங்கப்பட்டிருக்கின்றன. எனவே 2017 ஆம் அண்டு 42 கிராமங்களும், 2019 ஆம் ஆண்டு 126 கிராமங்களுமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே மொத்தம் 168 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் இன்னும் 3 வருடங்களுக்கு செயற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்திலே  இருக்கின்ற 345 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்வாங்கப்பட்டு முழு கிராமங்களும் இந்த கிராம சக்தி செயற்றிட்டத்திலே ஈடுபடும் கிராமங்களாக மாற்றியமைக்கப்படும். எனவே மக்கள் தாமாகவே முன்வந்து இந்த அமைப்பினூடாக கிராமத்திலுள்ள உட்கட்டுமானங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.
இச்செயற்றிட்டத்தின்கீழ் இக்கிராமத்திற்கு ஆளுமை விருத்திக்காக 3 இலட்சம்ரூபாயும், உட்கட்டுமானத்திற்காக 2 இலட்சம் ரூபாவும்,  வாழ்வாதாரத்திற்காக 5 இலட்சம் ரூபாவும், ஆரம்பத்திலே ஒதுக்கப்பட்டிருந்தன. இச்செயற்றிட்டம் இன்னும் விஸ்த்தரிக்கப்படவுள்ளன. ஒரு கிராமத்திலுள்ள ஒரு நபருக்கு 8000 ரூபாய் வீத்ததில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அந்தவகையில் கிராமங்களிலே இருக்கின்ற வறுமை குறைக்கப்படும்.
இத்திட்டத்திற்கு மக்கள் பங்களிப்பு அவசியமாகும் மக்களுடைய அபிவிருத்தியை மக்களே தீர்மானிப்பது அப்பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும். கிராம சக்தி வாரத்திலே 18 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரையில் நாளாந்தம் ஒவ்வொரு கருப்பொருளிலே செயற்பாடுகள் இடம்பெற்றன. 18 ஆம் திகதி சிரமதானம், 19 ஆம் திகதி  சமய ஆன்மிகதினம், 20 ஆம் திகதி சுற்றாடல் பாதுகாப்பு டெங்கு ஒழிப்புதினம், 21 ஆம் திகதி போதைப்பொருள் தடுப்பு தினம், 22 ஆம் திகதி கிராம சக்தி விழிப்புணர்வு தினம், 23 கிராம சக்தி கருத்திட்டம் ஆரம்பித்து வைத்தல், 24 ஆம் திகதி கலாசார தினம் என்பன இடம்பெற்றன.
போதையற்ற நாட்டை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். போதைவஸ்த்துக்கள் கடத்தப்படுவது, வியாபாரம் செய்வது போன்ற பல சம்பவங்களை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக நாளாந்தம் அறிகின்றோம். மட்டக்களப்பிலே உள்ள மாணவன் ஒருவனும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதை அறிந்தோம். எந்;த சமூகத்தினுடைய கைகளில் இந்த போதைப் பொருட்கள் சிக்கக் கூடாது என நாங்கள் சிந்தித்தோமோ அவ்வாறானவர்களின் கைகளில் அவை சிக்குண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடையமாகும். ஒரு குறிப்பிட்ட வலைப்பின்னலில் இருக்கின்ற சிலர் இன்னும் பொரும்பான்மையான இளம் சமூகத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இதில் எமது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மொழி, கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தொலைத்ததினாலேதான் நாங்கள் அவற்றை மீழம் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களையும், கலை கலாசார அம்சங்களையும் தற்போது மேலைத்தேயவர்கள் வைத்திருக்கின்றார்கள். மாறாக அதனை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம். யோகாசனம் உலகிலே அதிகம் பணம் சம்பாதிக்கக் கூடிய துறையாக அது இருக்கின்றது. தற்போது அதனை எமக்கு வந்து சொல்லித்தருபவர்கள் வெள்ளைக்காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எமது யோகிகளும், முனிவர்களும், எமக்கு அதனைக் கற்றுத்தந்திருக்கின்றார்கள். எமது மூதாதையர்கள் எமக்குக் கற்றுத்தந்த நல்ல பாடங்களை நாங்கள் மறந்து விட்டோம். எதிர்காலத்திலே அவற்றை எமது இளம் சமூதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
தற்போதைய நிலையில் ஆன்மீகம் முக்கிய விடையமாகக் காணப்படுகின்றது. அறநெறிப் பாடசாலைகளைக் கட்டுவதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்றார்கள். என அவர் தெரிவித்தார்.
இதன்போது கூத்து, வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், நடனம், விநோத உடை கலங்காரம், உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.