உறவுகளைக் கேட்டு முடங்கியது வடக்கு

வடக்கு கிழக்கிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவர்களின் பிள்ளைகளைகளுக்கு நீதி வேண்டியும், சர்வதேசம், இலங்கை அரசுக்கு காலக்கெடு வழங்கக் கூடாது எனக்கோரி வடமாகணம் முழுவதும், இன்று பூரண கர்த்தார் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வடமாகாணம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு முடங்கியுள்ளன.
இந்நிலையில் கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்னறலில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளனர். இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், என ஏராளமானோர் கலந்த கொண்டிருந்தனர்.