கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் பேடன்பவல் பிறந்த தின நிகழ்வு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன்பவலின் பிறந்த தின நிகழ்வு இன்று(22) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில், அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, கொத்தியாபுலை ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த சாரணமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சாரணர் இயக்கத்தின் தந்தை பற்றி கூறப்பட்டதுடன், சிறுவிளையாட்டுக்களும், பயிற்சிகளும் சாரணர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, சிரமதானப்பணியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில், உதவிமாவட்ட சாரண ஆணையாளர் வ.சுப்பிரமணியம் மற்றும் சாரண தலைவர்களும் பங்குபற்றினர்.