சுவிசில் பு. சத்தியமூர்த்தியின் 10 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு

யுத்த காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த ஷநாட்டுப் பற்றாளர்| சத்தியமூர்த்தியின் பத்தாவது நினைவு தினம் கடந்த சனிக்கிழமை (16 பெப்ரவரி) சுவிஸ் – சப்ஹவுசன் நகரில் நடைபெற்றது.
சிவராம் ஞாபகார்த்த மன்றம் மற்றும் சுவிஸ் விசன் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களான ஞா. குகநாதன், கனகரவி, க. அமரதாஸ், கிருஸ்ணா அம்பலவாணர் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். நினைவு நாளை ஒட்டி ஷநினைவுடன் பேசுதல்| என்ற பெயரிலான நினைவு மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.
ஷவிடுதலைப் புலிகள்| ஏட்டின் ஆசிரியர் ரவி முதற் பிரதியை வழங்கி வைத்தார். திருமதி பிரேமினி அற்புதராஜா முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டதுடன், நூல் தொடர்பிலான உரையையும் வழங்கினார். ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியமூர்த்தியின் நண்பர்களான இ. பாலமுருகன், சு. இராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.