கஸ்ட்டத்தின் மத்தியில் தேசிய மட்டம் வரை தடம் பதிக்கும் பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது – சிறிநேசன் எம்.பி

மிகவும் கஸ்ட்டத்தின் மத்தியில் தேசிய மட்டம் வரை விளையாட்டில் தடம் பதிக்கும் இவ்வாறான பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் வருடாந்த இல்லா மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை (14) மாலை நடைபெற்றது.
இதன்பொது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எனவே மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் மைதான புணரமைப்புக்கு முதற்கட்டமாக 10 இலெட்சம் ரூபாவை வழங்குவதற்கும், இக்கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு 5 இலெட்சம் ரூபாவை வழங்குவதற்கும் உறுதிபூணுகின்றேன். சாதனை படப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று சாதனை படைப்பவர்களுக்கு அவர்களுக்குரி பரிசுகளை பொதுப் பரிசாகக்கூட வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
ஒரு எல்லைக் கிராமத்தில் பல தொல்லைகளைத் தாங்கிக் கொண்டு முல்லைகள் நிறைந்த இப்பிரதேசத்தில் இல்லை என்று சொல்வதற்கில்லை இங்கு பிரயாணக் கஸ்ட்டங்கள். இவ்வாறான கிராமங்களிலிருந்து சாதனை படைக்கின்றனவர்களை உண்மையில் சரித்திர நாயகர்களாக நாங்கள் பாராட்ட வேண்டும்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கர்புரம், மற்றுமு; கணேசபுரம் கிராமங்களுக்கு தலா 10 இலட்டசம் மூபாக்களை அங்குள்ள மைதான புணரமைப்புக்கு ஒதுக்கிடு இவ்வரும் செய்துள்ளேன், அபோல் இப்பாடசாலையில் அமைந்துள்ள மைதானத்தைப் புணரமைப்பதற்கும் நான் 10 இலட்சம் ரூபாவை இவ்ருடம் வருங்குவேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் புவனேந்திரன், போரதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.அருள்சார, பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.இதயகுமார், மற்றும், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாரதி இல்லம், நவலர் இல்லம், விபுலாந்தர், இல்லம் என 3 இல்லங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களின் கலைகாலாசார பாரம்பரிய அம்சங்களுடன் அதிகதிகள் வரவேற்கப்பட்டு, விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இறுதியில் பாரதி இல்லம் 308 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், நவலர் இல்லம் 287 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், விபுலாந்தர் இல்லம் 276 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், பெற்றுக் கொண்டது.
இதில் வெற்றிபெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றிக்கேடையங்களும், அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.