மூதூர் இந்து இளைஞர் மன்றத்திற்குரிய காணியை அபகரிக்க எடுத்த மூன்றாவது முயற்சி

பொன்ஆனந்தம்

மூதூர் இந்து இளைஞர் மன்றத்திற்குரிய காணியை அபகரிக்க எடுத்த மூன்றாவது முயற்சி தொடர்பான பொலிஸ் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை மூதூர் பொலீசில் நடைபெற்றது.

மூதூர் புளியடிச்சந்தியில் இருந்து நொக்ஸ்விதியில் 100 மிற்றர் தொலைவில் உள்ள மேற்படி அரை ஏக்கர் காணியின் உட்பகுதியில் இருந்து மன்றத்தின் பெயர் பலமை நீக்கப்பட்டு, அக்காணி விற்பனைக்கு விடப்படும் என்ற விளம்பதாதையை கண்டு அதிர்ச்சியடைந்த நிருவாகம் மூதூர் பொலிசில் புதனன்று முறைப்பாடு செய்ததுடன் மூதூர் பிரதேச செயலாளரிடம் எழுத்துமூலம் முறையிட்டிருந்தது.

இதனையடுத்து விளம்பரப்பதாதையுடன் சம்பந்தப்பட்ட வரையும் நிருவாகத்தையும் மூதூர் பொலிஸ் நிலயத்திற்கு இன்று மாலை 4.00 மணியளவில் அழைத்து பொலிசார் விசாரணை செய்தபோது “ஆமிசரூக”; என அழைக்கப்படும் மொகம்மது அலியார் சாரூக் என்ற நபர் குறித்த காணி தமக்குரியது எனத்தெரிவித்தார்.இதன்போது மூதூர் பிரதேச சபை உறுப்பினர் வே.வேல்மாறன் மற்றும் மன்றத்தின் ஆலோசகர் பொருளாளாளர்,செயலாளர், முன்னாள் தலைவர் என பலரும் பொலிசில் பிரசன்னமாகியிருந்தனர்.

அதன்போது குறித்த சந்தேக நபரிடம் , ஆவணத்தைக்காண்பிக்குமாறு பொலிசார் கேட்டபோது வெறும் பிரதி செய்யப்பட்ட வரைபடமொன்றை மட்டும் வைத்திருந்தார்.

இதேவேளை இந்து மன்ற நிருவாகம் உரிய சட்ட ரீதியான பதிவு செய்யப்பட்ட காணி வரலாறு உள்ளிட்ட ஆவணக்கோவையையும் அகற்றப்பட்ட பெயர்பலகை உள்ளிட்ட படப்பிரதிகளையும் பொலிசாருக்கு காண்பித்தனர்..

இந்நிலையில் எந்தவித முறையான ஆவணமும் இன்றி எவ்வாறு காணிக்குள் சென்றீர்கள் சென்றது மட்டுமன்றி விற்பனைக்கான விளம்பரமும் தொங்கவிட்டீர்கள?; என வினாவிய பொலிசார். தகுதியான ஆவணங்கள் இருந்தால் உடன் காட்டு மாறு கோரிய போதும் முறையான எந்த ஆவணமும் காட்ட வில்லை.

இந்நிலையில் இவ்வாறான தவறான முயற்சிகளை இனி செய்யக்கூடாது என எச்சரித்ததுடன் தொங்க விடப்பட்ட விளம்பரத்தையும் உடன் அகற்றுமாறும் பொலிசார் அறிவுறுத்தினர்.

இதேவேளை இக்காணியை விற்பனை செய்து தமக்கும் உதவு மாறு திருகோணமலை நகரில் வசிக்கும் ராதா என்பவர் தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் சந்தேக நபர் பொலிசில் தெரிவித்தார்.

இக்காணியை அபகரிக்க எடுக்கும் மூன்றாவது முயற்சி இதுவாகும்; என மன்ற நிருவாகத்தினர் தெரிவித்தனர். கடந்த வருடம் நடந்த இவ்வாறான முயற்சி முறியடிக்கப்பட்டு பொலிசில் முறையிட்ட நிலையில் இவ்வாறான விசாரணைமூலம் மீழ காணி மன்றத்திற்கு உரித்தாக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

கடந்த கால வன்செயல்காரணமாக மூதூர் நகரப்பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்களது பாரம்பரிய இவ்வாறான பொதுச்சொத்துக்களைப்பாதுகாப்பது குதிரைக்கொம்பாகவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.